பள்ளி வகுப்பறையிலும் இனி ரோபோடிக்ஸ்.! கல்வி வளர்ச்சியில் அடுத்த இலக்கை அடையும் மாணவர்கள்

Published : Mar 11, 2025, 02:11 PM ISTUpdated : Mar 11, 2025, 09:22 PM IST
பள்ளி வகுப்பறையிலும் இனி ரோபோடிக்ஸ்.! கல்வி வளர்ச்சியில் அடுத்த இலக்கை அடையும் மாணவர்கள்

சுருக்கம்

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் ரோபோடிக்ஸ் படிப்புகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. கல்வித்துறையில் ரோபோடிக்ஸ் மூலம் புரட்சி செய்ய மைபோட் வென்ச்சர்ஸ் நிறுவனம் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Robotics education : நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதிய புதிய ரோபோடிக்ஸ் படிப்புகளும் அறிமுகம் ஆகி வருகிறது. இன்றை காலத்தில் எது நிஜம், எது பொய் என கண்டறியமுடியாத வகையில் AI-தொழில் நுட்பமும் அசூர வளர்ச்சியை பெற்று வருகிறது. எனவே வரும் காலத்தில் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கிடும் வகையில் மாணவர்கள் அதிகமாக கணிணி சார்ந்த படிப்புகள், ரோபோடிக்ஸ், AI போன்ற படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

கல்விக்கும் தொழில்துறைக்கும் மைபோட் வென்ச்சர்ஸ்

இந்த நிலையில் கல்வித்துறையில்  ரோபோடிக்ஸ் மூலமாக ஒரு புதிய புரட்சியை மைபோட் வென்ச்சர்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.  'மைபோட் வென்ச்சர்ஸ்' நிறுவனம் வேகமாக நகர்ந்து வரும் இன்றைய அறிவியலுக்கு ஏற்றார் போல ரோபாட்டிக்ஸ் கல்வியை மாணவர்களின் வகுப்பறையில் வைத்தே கற்று தருகிறது. இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமே கல்விக்கும், தொழில்துறைக்கும் உள்ள இடைவெளியை குறைப்பது ஆகும். இதன் மூலம் ஒரு மாணவன் இங்கு பெற்ற வகுப்பறை கல்வியை மட்டுமே வைத்துக்கொண்டு, தொழில்துறையில் சிரமமின்றி பணிபுரிந்திட முடியும்.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின்  தலைமை நிர்வாகி விவேக் திலிப் கூறியதாவது,  ரோபாட்டிக்ஸ் மற்றும் STEM (Science, Technology, Engineering, Mathematics) கண்டுபிடிப்புகள் மூலம் கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் பணியில் மைபோட் வென்ச்சர்ஸ் (MiBOT Ventures) ஈடுபட்டுள்ளது. ஒரு மழலையர் பள்ளி மாணவர் தனது முதல் ரோபோவை அசெம்பிள் செய்வதாக இருந்தாலும் சரி அல்லது ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர் AI-இயங்கும் போட்டை புரோகிராமிங் செய்வதாக இருந்தாலும் சரி, இந்தியாவில் முதல் முறையாக, ஃபின்னிஷ் விருது பெற்ற 43 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பால்  சரிபார்க்கப்பட்ட பாடத்திட்டம் தங்களிடத்தில் உள்ளதாக தெரிவித்தார். 

ஒரு ஆரம்பப்பள்ளி மாணவன் அவனது முதல் இயந்திரத்தை உருவாக்குவதாக இருந்தாலும், அல்லது ஒரு உயர்நிலை மாணவன் செயற்கை நுண்ணறிவில்(AI)  இயங்கும் போட்டை(BOT)  புரோகிராமிங் செய்வதாக இருந்தாலும் 'மைபோட் வென்ச்சர்ஸ்' நிறுவனம் அவர்களுக்கு உறுதுணையாய் இருக்கிறது.  கல்வி துறையில் மட்டுமின்றி, MiBOT வென்சர்ஸ் தொழில்நுட்பத்தை தொழில்களில் உள்ளே சென்று, தங்கள் செயல்முறைகளை துரிதப்படுத்தி, ஆட்டோமேஷன் மற்றும் புதுமையை மேம்படுத்த உதவுகிறது.  

இதுவரை தயாரிக்கப்பட்ட போட்டுகளுடன் போட்டியிடும் வகையில் MiBOT தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றை நிஜ உலக பிரச்சனைகளைத் தீர்க்க உதவக்கூடிய வகையில் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். MiBOT Ventures இன்றைய நாளில் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கி, உலகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் தொழில்துறைகளுக்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப முனைவோராக உருவாகியிருக்கிறது எனவும் கூறினார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!