அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு..! உற்சாகமாக வகுப்புகளுக்கு சென்ற மாணவர்கள்

Published : Jan 02, 2023, 08:16 AM IST
அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு..! உற்சாகமாக வகுப்புகளுக்கு சென்ற மாணவர்கள்

சுருக்கம்

அரையாண்டு தேர்வையொட்டி பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து இன்று பள்ளிகள் மீண்டும் செயல்பட தொடங்கியது.  

அரையாண்டு விடுமுறை

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வானது 23 ஆம் தேதி  முடிவடைந்ததை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.  விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. எனவே மாணவர்களுக்கு பள்ளிகளில் இருந்து  வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது. இந்த விடுமுறை தினத்தில் மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்வதும், தங்களது குடும்பத்தோடு சுற்றுப்பயணம் செய்தும் பொழுதை கழித்தனர். மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர். 

மீண்டும் செயல்பட தொடங்கியது பள்ளி

இதனையடுத்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு உற்சாகமாக சென்ற நிலையில், ஒரு சில மாணவர்கள் அழுது கொண்டே சென்றனர். இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் பள்ளி ஆசிரியர்கள் கொடுக்கவுள்ளனர்.  அதே நேரத்தில் தமிழக அரசை பொறுத்தவரை ஒன்றாம் வகுப்பு முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5 ஆம் தேதி பள்ளிகளை திறக்க உத்தரவிட்டது. இன்றைய தினம் தனியார் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்… குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் அறிவித்ததை அடுத்து முடிவு!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!