விடாமல் வெளுக்கும் மழை! நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

By SG Balan  |  First Published Dec 18, 2023, 7:06 PM IST

தென் மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 


நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை (டிசம்பர் 19) விடுமுறை அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. விடாது பெய்யும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி இருக்கின்றன. இதனால், அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Latest Videos

undefined

கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென் மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக ரயில் சேவைகள் ரத்து

இதனிடையே,  தென் மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்காக ரெட் அலர்ட் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 19) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதேபோல தூத்துக்குடி மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு மாவட்டங்களிலும் தமிழக அரசு பொது விடுமுறையும் அறிவித்துள்ளது. இதனால், வங்கிகள், அரசு மற்றும் தனியார்  நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பால், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிசம்பர் 19) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எல்லாம் போச்சே... நெல்லையில் கனமழையால் இடிந்து விழுந்த வீடுகள்... தவிக்கும் பொதுமக்கள்

click me!