வங்ககடலில் உருவாகிய மிக்ஜாம் புயலால் நேற்று முன் தினம் பெய்த தொடங்கிய மழை நேற்று நள்ளிரவு வரை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.
வங்க கடலில் உருவாகிய புயல் சென்னையை புரட்டி போட்ட நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்ககடலில் உருவாகிய மிக்ஜாம் புயலால் நேற்று முன் தினம் பெய்த தொடங்கிய மழை நேற்று நள்ளிரவு வரை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. மேலும் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் சீரமைக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களிலும் மழை நீர் தேங்கி இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
undefined
இதையும் படிங்க;- மிரட்டிய மிக்ஜாம்.. வரலாறு காணாத கனமழை.. வெள்ளநீர் கடலில் கலக்க முடியாமல் போனது ஏன்? - மீள்கிறது சென்னை!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மிக்ஜாம்' புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள். பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்றும் (4.12.2023) இன்றும் (5.12.2023) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. நாளை (6.12.2023) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.