மாண்டஸ் புயல் எச்சரிக்கை... எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!!

By Narendran SFirst Published Dec 9, 2022, 11:15 PM IST
Highlights

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே மாண்டஸ் புயலின் வெளிவட்டப் பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. 14 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்து வருகிறது. இதனிடையே புயலின் மையப்பகுதி கடலில் தான் இருக்கிறது. 

இதையும் படிங்க: மாண்டஸ் புயல் எதிரொலி... நாளை நடைபெற இருந்த வனத்துறை தேர்வு ஒத்திவைப்பு!!

அடுத்த இரண்டு மூன்று மணி நேரங்களில் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இரண்டு மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர்,வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: புயல் சூழலை சமாளிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது… முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!!

மேலும் கொடைக்கானல், சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

click me!