
சென்னை அண்ணா நகரில் பள்ளி ஆசிரியை நிவேதாவை கார் ஏற்றி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீயணைப்பு துறை ஓட்டுனராக பணி புரிபவர் இளையராஜா. இவர் சென்னையை சேர்ந்த பள்ளி ஆசிரியை நிவேதா என்பவருடன் முகநூல் மூலமாக பழக்கமாகி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து கணபதி என்பவருடன் நிவேதாவிற்கு சில நாட்களுக்கு முன்பு முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கணபதிக்கு பணம் உதவி செய்யும் அளவிற்கு இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இதையறிந்த இளையராஜா நிவேதாவை பலமுறை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நிவேதா கணபதிக்கு பணம் கொடுக்க சந்தித்துள்ளார். இதை நேரில் பார்த்த இளையராஜா ஆத்திரமடைந்து வேகமாக காரை நிவேதா மீது மோதியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த நிவேதாவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நிவேதா மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜாவை கைது செய்துள்ளனர். மேலும் கணபதியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.