அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனாருக்கு 3 ஆண்டு சிறை - மோசடி வழக்கில் கோவை நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

 
Published : May 08, 2017, 08:35 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனாருக்கு 3 ஆண்டு சிறை - மோசடி வழக்கில் கோவை நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

சுருக்கம்

Coimbatore court orders action on fraud case for 3 years in jail

வணிக வளாகம் வாங்கியது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவு பிரபித்துள்ளது.

வணிக வளாகம் வாங்கியது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரத்தின் மீது அவரது அண்ணன் புகார் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த வழக்கு கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், கோவை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது கோவை நீதிமன்றம்.

PREV
click me!

Recommended Stories

இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!
கம்முனு இருப்பது அரசியலில் எடுபடாது.. பேசவேண்டிய இடத்திலாவது பேசுங்கள்.. விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்