
சேலம் அருகே மழை நீர் தேங்கி இருந்த பள்ளத்தில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர் அருகே கல்பகனூர் பள்ளப்பட்டியில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கழிவு நீர் தொட்டி கட்ட பள்ளம் தொண்டபட்டிருந்தது.
அப்பகுதியில் மழை பெய்து இருந்ததால் பள்ளத்தில் முழுவதும் மழைநீர் தேங்கி இருந்தது.
அப்போது அங்கு பந்து விளையாடி கொண்டிருந்த விஷ்ணு, சஞ்சய் என்ற சிறுவர்களின் பந்து பள்ளத்தில் உள்ள நீரில் விழுந்துள்ளது.
அந்த பந்தை எடுக்க முயன்ற சிறுவர்கள் இருவரும் தவறி பள்ளத்தில் விழுந்துள்ளனர்.
இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.