அதிர்ச்சி... டெங்கு காய்ச்சலுக்கு பலியான பள்ளி மாணவன்... ஈரோட்டில் சோகம்!!

Published : Dec 27, 2021, 06:32 PM IST
அதிர்ச்சி... டெங்கு காய்ச்சலுக்கு பலியான பள்ளி மாணவன்... ஈரோட்டில் சோகம்!!

சுருக்கம்

சத்தியமங்கலத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தியமங்கலத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 15 பேர் குழந்தைகள் என்பது வேதனைக்குறிய ஒன்றாக உள்ளது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் இன்று மீண்டும் டெங்குவால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில தினங்களாக டெங்கு நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே சத்தியமங்கலத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததார். இதனால் நகராட்சி சுகாதாரத்துறையினர் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகள் முதல் பெரியோர் வரை காய்ச்சலால் அவதிப்படுவதால் சாலை ஓரங்கள், தாழ்வானப் பகுதிகளில் தேங்கியுள்ள நீரைக் கண்டறிந்து தடுப்பு கிருமினிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. வீதி வீதியாக குடியிருப்புகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப்பணியில் நகராட்சிப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குடிநீர் தொட்டிகளில் குளோரின் அளவு சரிபார்க்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள், வீடுகள், பள்ளிகள் அருகில் நீர் தேங்கி, கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள இடங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்டத் தேவையற்றப்பொருட்கள் உள்ள இடங்களில் கொசுப்புழு ஒழிப்புக் கிருமி நாசினி தெளிக்கும் புகை மருந்து அடிக்கும் பணிகளில் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் தங்கள் வீட்டை சுற்றிலும், நீர் தேங்குவதை தடுப்பதின் வாயிலாக டெங்கு பரவலை தடுக்கலாம். டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. டெங்கு கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது யாருக்கும் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
தங்கமணி போறார்.. சி.வி. சண்முகம் போறார்... நீ விளக்கு புடிச்சு பாத்தியா..? பொதுக்குழுவில் உக்கிரமாக மாறிய C.V.S