
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள செங்குணம் கொள்ளைமேடு பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி மாணவர்களக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பள்ளியில் மதிய உணவின்போது மாணவர்களுக்கு முட்டை சரிவர வழங்காமல் வெளியில் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
முட்டை கேட்ட பள்ளி மாணவன் மீது தாக்குதல்
இந்த சூழலில் அந்த அரசுப் பள்ளியில் சத்துணவு வழங்கியபோது 5ம் வகுப்பு மாணவன் முட்டை கேட்டுள்ளார். அதற்கு சத்துணவு ஊழியர் முட்டை இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், சமையல் கூடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த முட்டைகளை அந்த மாணவன் கண்டுபிடித்தது மட்டுமல்ல சத்துணவு ஊழியரை்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாள் ஆகியோர் மாணவனை துடைப்பத்தால் தாக்கி உள்ளனர். இதுதொடர்பாக வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து லட்சுமி மற்றும் முனியம்மாள் ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: கோவையில் கொட்டி தீர்த்த கனமழை! இன்றும் தரமான சம்பவம் இருக்காம்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!
தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள செங்குணம் கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இலட்சுமி, சத்துணவு சமையலர் மற்றும் முனியம்மாள், சமையல் உதவியாளர் ஆகியோர் அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவரை துடைப்பத்தால் தாக்கும் வாட்ஸ் அப் வீடியோ வெளிவந்ததை தொடர்ந்து, உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திருவண்ணாமலை அவர்களால் நேரடி விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: சத்துணவு ஊழியரின் அராஜகம்....பரபரப்பை கிளப்பிய வீடியோ !
தற்காலிகப் பணிநீக்கம்
மாணவர், அவரது பெற்றோர், ஆசிரியர், சம்பந்தப்பட்ட சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகியோர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்திய பணியாளர்கள் தமது தவறை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் போளூர், வட்டார வளர்ச்சி அலுவலரால் உடனடியாக தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
மேலும், குற்றம் சாட்டப்பட்ட சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் மீது பி.என்.எஸ் (BNS) சட்டம், பிரிவு 131 ன் கீழ் மற்றும் சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015, பிரிவு 75 ன் கீழ் முதல் தகவல் அறிக்கை திருவண்ணாமலை மாவட்டம், போளூர் காவல் நிலையத்தில் பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.