மாணவி மர்ம மரணம்.. பள்ளியில் என்ன நடந்தது.. ? விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Published : Jul 17, 2022, 02:14 PM IST
மாணவி மர்ம மரணம்.. பள்ளியில் என்ன நடந்தது.. ? விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சுருக்கம்

கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில் விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவி மரணம் நடத்த இடத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவி இறப்பு விவகாரத்தில் என்ன நடந்தது என்று விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி பிளஸ் 2 மாணவி மாடியிலிருந்து கீழே குதித்து விழுந்து இறந்ததாக பள்ளி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இருப்பினும், மாணவியின் இறப்பில் சந்தேக இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் குற்றச்சாட்டி வருகின்றனர். இதனிடையேகடந்த 4 நாட்களாக அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அது கலவரமாக மாறியுள்ளது. 

பள்ளிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்கள், 50க்கும் மேற்பட்ட பள்ளியின் வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர். மேலும் சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்ட கும்பல், போலீசார் தடுப்புகளை உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர். காவல்துறை மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தினர். போலீஸ் வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இதனால் நிலைமைக் கட்டுபடுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி வன்முறைக்கு வெளியூர் நபர்களே காரணம்.! மாணவி மர்மச்சாவு மட்டும் காரணம் இல்லை - அன்புமணி

போலீசாரின் தடுப்புகளை உடைத்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றன.  பள்ளி வளாகத்தில் நின்றுக்கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்து எரித்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கூடியதால, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வெளி மாவட்டத்திலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிககை விடுத்துள்ளார்.

மேலும் கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி வன்முறை.. கட்டுக்கடங்காமல் சென்ற கலவரம்.. உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை..

இந்நிலையில் பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில் விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவி மரணம் நடத்த இடத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவி இறப்பு விவகாரத்தில் என்ன நடந்தது என்று விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

எந்த ஷா வந்தாலென்ன.? டெல்லி பாதுஷாவே வந்தாலும் கருப்பு சிகப்பு படை தக்க பாடம் புகட்டும்..! ஸ்டாலின் ஆவேசம்
திமுககாரன் ரெண்டு பேர் இருந்தாலும் கடைசி வரை பூத்ல இருப்பான். ஆனா, நாம..? பொதுக்குழுவில் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை..!