பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய பள்ளி மாணவன்… நிலை தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு… வைரலாகும் வீடியோ!!

Published : Aug 30, 2022, 07:05 PM IST
பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய பள்ளி மாணவன்… நிலை தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு… வைரலாகும் வீடியோ!!

சுருக்கம்

செங்கல்பட்டு அருகே பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவன் நிலைத்தடுமாறி கீழே விழுந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

செங்கல்பட்டு அருகே பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவன் நிலைத்தடுமாறி கீழே விழுந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் இருந்து தினந்தோறும் பேருந்து ஒன்று அச்சரப்பாக்கம் சென்று வருகிறது. இந்த பேருந்து இன்றும் வழக்கம்போல காலை அச்சரப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மக்கள் கூட்டத்துடன் சென்ற அந்த பேருந்தில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்தனர்.

இதையும் படிங்க: இந்த 3 மாவட்ட மக்கள் உஷார்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

பேருந்து மேல்மருவத்தூர் அருகே செல்லும்போது படிக்கெட்டில் தொங்கிய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளியைச் சேர்ந்த நிவேதன் என்ற மாணவன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதை பின்னால் வந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வைரலானது. இந்நிலையில் படியில் இருந்து விழுந்த மாணவன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதையும் படிங்க: படிக்கட்டில் பயணம்; திடீரென விழுந்த மாணவன்; வைரல் வீடியோ!!

மாணவனை அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டு மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காலை மற்றும் மாலை வேளையில் தடம் எண் 19 கொண்ட அரசு பேருந்து ஒன்று மட்டுமே வருகிறது. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கிருந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. கூடுதல் பேருந்து இல்லாததே இதற்கு காரணம். உடனடியாக துறைரீதியாக நடவடிக்கை எடுத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டும் என்று தெரிவித்தனர். 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!