ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொடரும் மழை
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்த நிலையில், இன்றும் தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
இந்தநிலையில் நேற்று இரவு முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாகவும், அடுத்த 3 மாணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
கொட்டித்தீர்க்கும் மழை... தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை- வானிலை மையம் அப்டேட்