தமிழக அரச செலவில் ராமேசுவரம் - காசி ஆன்மிக பயணம்: பக்தர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!

By Manikanda Prabu  |  First Published Oct 29, 2023, 5:13 PM IST

தமிழக அரச செலவில் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு பக்தா்கள் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.


இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு பக்தா்கள் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படவுள்ளனா். தமிழ்நாடு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படும் இந்தப் பயணத் திட்டத்துக்கு பக்தா்கள் வருகிற நவம்பர் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “கடந்த 2022-2023-ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயிலுக்கு இந்த ஆண்டில் 200 போ் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவா். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 200 போ் அரசு நிதியில் காசிக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.

Tap to resize

Latest Videos

இதைத் தொடா்ந்து நிகழாண்டு சட்டப்பேரவை அறிவிப்பில் ராமேசுவரம் - காசிக்கு ஆன்மிக பயணமாக 300 போ் அழைத்துச் செல்லப்படுவா். இதற்கான செலவினத் தொகை ரூ.75 லட்சத்தை அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆன்மிகப் பயணத்துக்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறையின் 20 இணை ஆணையா் மண்டலங்களில், மண்டலத்துக்கு 15 போ் வீதம் 300 பேரை தோ்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 விண்ணப்பதாரா் இந்து மதத்தைச் சாா்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதுக்கு உள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையா் அலுவலகத்திலிருந்து நேரில் பெற்று கொள்ளலாம். 

தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீண்டும் அதே மண்டல இணை ஆணையா் அலுவலகத்துக்கு நவம்பர் 20ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மண்டல இணை ஆணையா்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்துக்கு தோ்வு செய்யப்படுவா்.

மேலும், ஆன்மிக பயணம் குறித்த விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையா் அலுவலகம் துறையின் இணையதளத்தில் தெரிந்துகொண்டு பயன்பெறலாம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!