Savukku Shankar :மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக் தகவல்

By Ajmal Khan  |  First Published Aug 13, 2024, 5:03 PM IST

மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சவுக்கு சங்கரின் அவதூறு கருத்து

அரசியல் விமர்சகரும், யூடியூப்பருமான சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில் அரசியல் கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக திமுக ஆட்சியையும், முதலமைச்சர் ஸ்டாலின்,உதயநிதி உள்ளிட்டவர்களுக்கு எதிராக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தார். இது மட்டுமில்லாமல் அரசு அதிகாரிகளையும், காவல் துறை அதிகாரிகளையும் ஒருமையில் பேசி வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வேகமாக வைரல் ஆனது. இந்தநிலையில்  ரெட் பிக்ஸ் என்கின்ற யூடியூப் தொலைக்காட்சியில் பெண் காவல்துறையினரை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பெண் காவலர்கள் கொடுத்த புகாரின் பேரில்  சவுக்கு சங்கரை தேனியில் வைத்து போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tap to resize

Latest Videos

Chennai News: போன வாரம் பெரம்பூர் பெண் போலீஸ்.. இந்த வாரம் அம்பத்தூர் எஸ்.ஐ துடிதுடித்து பலி.. நடந்தது என்ன?

குண்டர் சட்டம் ரத்து- மீண்டும் பாய்ந்த குண்டர் சட்டம்

இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  தமிழகம் முழுவதும் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் அடுத்தடுத்து வழக்குகளில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.  இதனால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலைக்கு சவுக்கு சங்கர் தள்ளப்பட்டார். குண்டர் சட்டத்திற்கு கீழ் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படது.  உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் என இரு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்து சவுக்கு சங்கர் விடுவிக்கப்பட்டார்,  அதே நேரத்தில் சவுக்கு சங்கர் மீது மற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் வெளியே வர முடியாத நிலை இருந்தது. இதனால் மற்ற வழக்குகளில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமின் பெற்று வந்த நிலையில், ஒரு சில நாட்களில் சிறையில் இருந்து வெளியில் வந்து விடுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். 

ஒரு நாள் போலீஸ் காவல்

இந்த நிலையில் தான் திடீரென சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனால் உடனடியாக சிறையில் இருந்து வர முடியாத நிலை உருவானது.  தற்போது மேலும் ஒரு ஷாக் தகவலை நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு அளித்துள்ளது. அதன்படி முத்துராமலிங்கத் தேவரை விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.  முத்துராமலிங்கத் தேவர் குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் சவுக்கு சங்கரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்த நிலையில் போலீஸ்க்கு கோவை 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

சென்னையில் ரவுடிகளை வெறித்தனமாக வேட்டையாடும் போலீஸ்! அதிகாலையிலேயே துப்பாக்கி சத்தம்! அலறும் தலைநகர்!

click me!