
கடந்த 2020ஆம் ஆண்டு காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்கிஸ் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இதனையடுத்து இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க:ஆன்லைன் விளையாட்டு தடை.. பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்கிறார் முதலமைச்சர்
இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிபதி நாகலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர்.
சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெண்ணிலா ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரை 6 காவலர்களின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர். தொடர்ச்சியாக குறுக்கு விசாரணைக்காக வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் படிக்க:இந்த சாதனையை செய்தது திராவிட இயக்கம் தான்... பெருமிதம் கொள்ளும் கனிமொழி எம்.பி.!!