ஜெயலலிதா பிறந்தநாள் குறித்து சசிகலா கடிதம் எழுதினாரா? சிறை அதிகாரி என்ன சொல்கிறார்…

 
Published : Feb 25, 2017, 08:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
ஜெயலலிதா பிறந்தநாள் குறித்து சசிகலா கடிதம் எழுதினாரா? சிறை அதிகாரி என்ன சொல்கிறார்…

சுருக்கம்

ஜெயலலிதா பிறந்தநாள் குறித்து சசிகலா கடிதம் எழுதினாரா? சிறை அதிகாரி என்ன சொல்கிறார்…

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, பின்னர் அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து சசிகலா முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில்  சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதாவின் ஆன்மா இளைப்பாறும் வகையில் 24 ஆம் தேதி அவரது பிறந்த நாள் கொண்டாட வேண்டும்” என கடிதம் எழுதியதாக அதிமுக தலைமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் அந்த கடிதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா எழுதிய கடிதம்தானா என சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பரப்பன அக்ரஹாரா சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் , கடந்த இரு நாட்களாக சசிகலாவை யாரும் சந்திக்கவில்ல எனவும். அவரும் சிறையில் இருந்து யாருக்கும் கடிதம் எழுதவில்லை என்றும் தெரிவித்தார்.

சசிகலா அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் சிறைத்துறை மூலமாகவே கடிதங்கள் எழுதலாம் என்றும் அதற்கு எந்த தடையும் இல்லை” என்றும் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

 

 

PREV
click me!

Recommended Stories

புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!