
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா பொழுதை போக்குவதற்கு இளவரசியுடன் இணைந்து ரம்மி விளையாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைந்ததையடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பெங்களூரு சிறையில் தனக்கு போதுமான வசதிகளை சிறை அதிகாரிகள் செய்து கொடுப்பதில்லை என சசிகலா குற்றம் சுமத்தி வருகிறார். அவரை சிறைக்கு பார்க்கச் செல்லும் அனைவரிடமும் சசிகலா இதனை சொல்லி புலம்பி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே வெளியில் இருந்து கொண்டு வரும் வீட்டுச் சாப்பாட்டை உள்ளே எடுத்துச் செல்ல , சிறை அதிகாரிகள் அனுமதிப்பதில்லை என்று புலம்பிய சசிகலா,கொசுக்கடியால் இரவில் நிம்மதியாக தூங்க முடிவதில்லை எனவும் தன்னை சந்திக்க வருபவர்களிடம் குறை சொல்லுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பகல் நேரங்களில் பொழுது போகாமல் சிரமப்படும் நேரத்தில் இளவரசியுடன் இணைந்து ரம்மி விளையாடுவதாகவும் சசிகலா தெரிவித்தாக தகவலி வெளியாகியுள்ளது.
நாள்தோறும் காலையில், ப்ரித்தியங்கரா தேவியை வணங்குவதாகவும், பூஜை செய்து வழிபட விருப்பம் இருந்ததும், சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதி மருத்து வருவதாகவும் சசிகலா தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.