சாலையில் உட்கார்ந்து முழக்கம்போட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்; 175 பேர் கைது…

 
Published : Mar 18, 2017, 07:18 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
சாலையில் உட்கார்ந்து முழக்கம்போட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்; 175 பேர் கைது…

சுருக்கம்

Officers came to Rhode mulakkampotta Rural Development Arrested 175 people

கடலூர்

தமிழகம் முழுவதும் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக போராடி வரும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். 15 பெண்கள் உள்பட மொத்தம் 175 பேர்.

தமிழகம் முழுவதும் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கடந்த 14–ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். அப்போது தேர்தல் பணிக்கு மட்டும் முக்கியத்துவம் தர வேண்டும்.

ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

பணி வெற்றிடங்களை நிரப்ப வேண்டும்.

உதவி இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் பணி வெற்றிடங்களை பதவி உயர்வு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

இவர்களுக்கான பணி மாறுதல்கள் வெளிப்படை தன்மையோடு பாகுபாடின்றி வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்துடன் பேரணி, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். நேற்று 4–வது நாளாக அவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒன்று திரண்டனர். அதன்பிறகு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தப் போராட்டத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் பரசுராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ரங்கசாமி, வட்டார இணை செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட இணை செயலாளர் செல்வம், உணவு பாதுகாப்புத்துறை மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர், அனைவரும் கோரிக்கைகளை விளக்கி முழக்கங்களை எழுப்பியபடி ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள குண்டுசாலையில் மறியல் நடத்தினர். உடனே அவர்களை பாதுகாப்புக்கு நின்ற கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவலாளர்கள் கைது செய்தனர். இதில் 15 பெண்கள் உள்பட மொத்தம் 175 பேர் இருந்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

 

PREV
click me!

Recommended Stories

சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்