
தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள சசிகலாவின் கணவர் எம,நடராஜன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அதிமுக சட்டமன்ற உறுபினர்களின் கூட்டத்துக்கு பிறகு சசிகலாவை அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ள இந்த சூழ்நிலையில் நடராஜன் அப்போலோ வில் சேர்க்கப்பட்டுள்ளார்
உடல் அசதி மற்றும் சோர்வு காரணமாக அவர் அப்போலோ கொண்டு செல்லப்பட்டுள்ளார்
அப்போலோவில் நான்காவது மாடியில் உள்ள எல் ப்ளாக் இல் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமார் உள்ளிட்ட மருத்துவர்கள் பார்த்து கொள்கின்றனர்,இன்னும் ஒரு சில நாட்கள் தங்கி இருந்து பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முடித்து வீடு திரும்புவார் என அப்போல்லோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன