
வழக்கத்தை விட சற்றே அதிகமாக இன்று ‘பிக் பிரேக்கிங்கில்’ படபடத்துக் கிடக்கிறது தமிழகம். அதாவது கடந்த 2016 செப்டம்பர் 22_ம் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அட்மிட் செய்யப்பட்டபோது அவரது அப்போதைய உடல்நிலை பற்றி தயாரிக்கப்பட்ட ‘பேஷண்ட் கேர் ரிப்போர்ட்’ என்பது வெளியாகியிருக்கிறது.
ஜெ., மரண விவகாரம் தமிழகத்தை திணறடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இது உண்மையிலேயே ‘ஒர்தி பிரேக்கிங்’ என்று விமர்சகர்களால் முதல்கட்டமாக நோக்கப்படுகிறது.
அந்த ரிப்போர்ட்டில் ஜெயலலிதாவின் சர்க்கரை அளவு, உடல் வெப்பநிலை, சுவாச அளவு ஆகியவற்றின் அளவுகள் குறிப்பிடப்படுள்ளன. கூடவே அப்போது ‘ஜெயலலிதாவின் உடலின் புண்களோ, காயங்களோ இல்லை.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
இதன் மூலம் யாருக்கு ஆறுதலோ இல்லையோ ஆனால் சசி டீம் மிகவும் சந்தோஷித்திருக்கிறது. காரணம்?...
‘செப்டம்பர் 22-ம் தேதி இரவில் சசிகலா போயஸ் வீட்டில் வைத்து ஜெயலலிதாவை தள்ளிவிட்டுவிட்டார். இதில் ஜெயலலிதா கீழே விழுந்ததில்தான் அவருக்கு தலை மற்றும் உடலில் கடுமையாக அடிபட்டுவிட்டது. இதனால் அபாய நிலைக்கு சென்ற ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் கழித்து இறந்துவிட்டார்.
அம்மாவை கொன்னதே சசிகலாதான்.’ என்று தமிழகத்தில் ஒரு டாக் ஓடிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்த வாதம் இன்றும் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ஜெ.,வின் ‘பேஷண்ட் கேர் ரிப்போர்ட்’ மூலமாக அவரது உடலில் காயங்கள் இல்லை என்பதால் சசிகலா அம்மாவை தள்ளிவிட்டதாக பேசப்படுவது வதந்தியே, திட்டமிட்டபொய்யே.... இதன் மூலம் சின்னம்மா மீதிருந்த களங்கம் நீங்கிவிட்டது. அம்மாவை காத்ததே சின்னம்மாதான் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியிருக்கிறது.’ என்று இந்த பரபர நேரத்திலும் சசிகலாவின் ஆதரவு புள்ளிகள் ஆதாய பாலிடிக்ஸை ஆரம்பித்திருக்கின்றனர்.
இது எந்தளவுக்கு சசிக்கு கைகொடுக்கும் என்பதை போகப்போகத்தான் பார்க்க வேண்டும்.