அதிரடி பிரேக்கிங்: ஜெயலலிதாவின் ‘பேஷண்ட் கேர் ரிப்போர்ட்’ வெளியாகியது...

Asianet News Tamil  
Published : Sep 28, 2017, 10:37 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
அதிரடி பிரேக்கிங்: ஜெயலலிதாவின் ‘பேஷண்ட் கேர் ரிப்போர்ட்’ வெளியாகியது...

சுருக்கம்

Breaking released jayalalithaas patient care report

ஜெயலலிதா 2016 செப்டம்பர் 22_ல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு தயாரிக்கப்பட்ட ‘பேஷண்ட் கேர் ரிப்போர்ட்’ டில் இருக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 
அதிலுள்ள தகவல்களின் ஹைலைட்ஸ் பாயிண்ட்ஸ்...

*    10 மணிக்கு போயஸிலிருந்து அப்பல்லோவுக்கு போன்.

*    10.01 க்கு மூன்று மருத்துவர்கள் அடங்கிய ஆம்புலன்ஸ் அப்பல்லோவிலிருந்து போயஸ் நோக்கி கிளம்பியது. 

*    10.05 க்கு ஆம்புலன்ஸ் போயஸ் கார்டனை அடைகிறது. 

*    போயஸ் கார்டன் இல்லத்தின் முதல்மாடியில் தனது அறையில் படுத்த நிலையில் இருந்திருக்கிறார். 

*    செமி கான்ஸியஸ் நிலையில், மருத்துவர்களின் ‘மேடம்’ அழைப்புக்கு  ‘ம் ...ஆங்’ என்றே பதிலளித்திருக்கிறார்.

*    ஜெ., உடலில் எங்குமே காயமோ, புண்களோ இல்லை (சசி தப்பித்தார்)

*    ஜெ.வுக்கு அதே இடத்தில் மருத்துவ சோதனை ஆரம்பமானது. 

*    ஜெயலலிதாவின் பிபி அளவு 140/70 இருந்திருக்கிறது. சாச்சுரேஷன் (ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவு 100 இருக்க வேண்டும்) 48 என்றே இருந்திருக்கிறது. இது அவர் அபாய கட்டத்தில் இருக்கிறார் என்பதை காட்டியிருக்கிறது.

*     டெம்ப்ரேச்சர் நார்மல். அதற்கு முந்தைய நாட்களில் ஃபீவர் வந்து சென்றது அருகிலிருந்தவர்களால் மருத்துவக்குழுவிடம் பகிரப்பட்டிருக்கிறது. 

*    ஜெயலலிதாவுக்கு அப்போதிருந்த சர்க்கரையின் அளவு 508.

*    அவரது அறையிலேயே ட்ரீட்மெண்ட் கொடுக்க ஆரம்பித்ததும் சாச்சுரேஷன் அளவு 98 ஐ தொட்டது. இதன் மூலம் வீட்டிலேயே மிக மிக அபாயகரமான நிலையை தொடுவதிலிருந்து ஜெயலலிதா காப்பாற்றப்பட்டிருக்கிறார்.

*    10: 25க்கு ஜெயலலிதாவுடன் ஆம்புலன்ஸ் அப்பல்லோ மருத்துவமனையை அடைந்தது. 
டாக்டர்கள் புடை சூழ அதி தீவிர ட்ரீட்மெண்ட் துவக்கம்...

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்