டாக்டர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா… மூன்று நாட்கள் கொண்டாட சசிகலா வேண்டுகோள்…

Asianet News Tamil  
Published : Jan 12, 2017, 05:52 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
டாக்டர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா… மூன்று நாட்கள் கொண்டாட சசிகலா வேண்டுகோள்…

சுருக்கம்

டாக்டர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா… மூன்று நாட்கள் கொண்டாட சசிகலா வேண்டுகோள்…

டாக்டர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை 3 நாட்களுக்‍கு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டங்கள்  நடைபெறும் என, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள  அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் ‘100-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 17.1.2017 செவ்வாய்க்கிழமை முதல் 19.1.2017 வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள்  டாக்டர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்' கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெறும் என தெரிவித்துள்ளார். 

 

புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், டாக்டர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் எனவும் சசிகலா தொரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

TVK Vs CPM: ஆதரவை வாபஸ் பெறுவோம்.. தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை!
CM Vijay Vs PM Modi: ஆபத்து! தமிழ்நாட்டிற்கு உடனே வேணும்.. விவசாயிகளுக்காக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பரபரப்பு கடிதம்