
தைப் பொங்கல் நாள் விரைவில் மீண்டும் தமிழ் புத்தாண்டாகும்... மு.க.ஸ்டாலின் ஆரூடம்…
தைத்திருநாள், உழவர் பெருநாள் என தமிழக மக்களாள் அழைக்கப்படும் தைமுதல் நாள் வரும் சனிக்கிழமை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக் காலத்தில், தைத்திருநாள், தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த முறை மாற்றப்பட்டு மீண்டும் சித்திரை 1 ஆம் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவூரில் திமுக சார்வில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
அப்போது பேசியமு.க.ஸ்டாலின்,தொடர்ந்து, தமிழ் பண்பாட்டிற்கு ஆபத்து என்றால் தமிழினம் அதனைப் பார்த்து கொண்டிருக்காது என்றும் தமிழகத்தில்விவசாயிகளின் நிலை வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. இதற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் தைத் திருநாள் மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்படும் என்றும் அது விரைவில் வரும் என்றும் தெரிவித்தார்.