வீட்டை சுற்றி வளைத்து தாக்குறாங்க.! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- நடந்தது என்ன.?

Published : Mar 24, 2025, 01:28 PM ISTUpdated : Mar 24, 2025, 01:33 PM IST
வீட்டை சுற்றி வளைத்து தாக்குறாங்க.! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- நடந்தது என்ன.?

சுருக்கம்

துப்புரவு தொழிலாளர்கள் போல் வந்த 50 பேர் தாக்குதல் தனது வீட்டை தாக்கியிருப்பதாக சவுக்கு சங்கர் புகார் தெரிவித்துள்ளார்.

Attack on Savukku Shankar house :  அரசியல் கட்சி தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் தொடர்பாக பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்கியவர் சவுக்கு சங்கர், இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை தனது வீட்டை 50க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.  நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து,

 

வீடியோ காலில் மிரட்டல்

படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர்.  என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.   காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன்.  ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்தனர்.   9.30 மணி முதல் இது வரை வரை போராட்டம் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை.    அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை என சவுக்கு சங்கர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்

அண்ணாமலை கண்டனம்

இதற்கு கண்டம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திமுக ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு.  திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், 

கடுமையான நடவடிக்கை எடுத்திடுக

காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது. ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!
எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!