சென்னையின் புதிய கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்... யார் இவர்..? காவல்துறையில் கடந்து வந்த பாதை..

Published : Jun 30, 2023, 08:50 AM ISTUpdated : Jun 30, 2023, 08:57 AM IST
சென்னையின் புதிய கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்... யார் இவர்..? காவல்துறையில் கடந்து வந்த பாதை..

சுருக்கம்

சென்னையின் 109-வது காவல் ஆணையாராக சந்தீப் ராய் ரத்தோரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

சென்னையின் புதிய காவள் ஆணையராக டிஜிபி சந்தீர் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையின் 108-வது காவல் ஆணையராக பணியாற்றிய சங்கர் ஜிவால் தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். இந்த சூழலில் சென்னையின் 109-வது காவல் ஆணையாராக சந்தீப் ராய் ரத்தோரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர்?

1968-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவரான சந்தீப் ராய் ரத்தோர், குவைத் நாட்டில் பள்ளிப்படிப்பை பயின்றார். 1992-ம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர், பரமக்குடி மற்றும் நாகர்கோயில் மாவட்டத்தில் ஏ.எஸ்.பியாக பணியை தொடங்கினார் பின்னர் 1996-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட எஸ்.பியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர், பின்னர் கோவை மாவட்டத்தில் துணை ஆணையராக பணி புரிந்தார்.

Shankar Jiwal: தமிழக அரசு அதிரடி; புதிய டிஜிபியாக பதவியேற்கிறார் சங்கர் ஜிவால்!

அவர் கோவை மாநகர காவல் ஆணையரக இருந்த போது தான் 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. அப்போது துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்தார். பின்னர் டெல்லி திஹார் சிறையில் கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றினார்.

பின்னர் 2000-ம் ஆண்டு சென்னை போக்குவரத்து துணை ஆணையராக பதவி வகித்தார். 2001, 2002 ஆம் ஆண்டுகளீல் உலக அமைதிக்கான சிறப்பு காவல் படையில் பதக்கங்களையும் வென்றார்.

20023-ம் ஆண்டு சிபிசிஐடியில் எஸ்.பியாக இருந்த சந்தீப் ரத்தோர், முத்திரை தாள் மோசடி தொடர்பான வழக்கை விசாரித்தார்.

2005-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த போது அம்மாவட்ட காவல்துறைக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்றுக் கொடுத்தார்.

2015-ம் ஆண்டு தேசிய பேரிடர் மீட்புப்படை தலைவராக பணியாற்றி போது, கேதர்நாத் வெள்ளம், சென்னை முகலிவாக்கம் கட்டட விபத்து போன்று பேரிடர்களை திறம்பட கையாண்டார்.

2017-2019 வரை தமிழகத்தின் சிறப்பு காவல்படை தலைவராக இருந்தார்.

2019-2021 வரை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயத்தில் தலைவராக இருந்தார். அப்போது காவல்துறையில் அதிகப்படியாக இளைஞர்களை சேர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆவடி காவல் ஆணையரகத்தின் காவல் ஆணையராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோ பதவி வகித்தார். பின்னர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற அவர், ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் பயிற்சி கல்லூரியில் டிஜிபியா பதவி வகித்தார்.

சந்தீர் ரத்தோர் வேலூர் இன்ஸ்டியூட்டில் பேரிடர் மேனேஜ்மெண்ட்டில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர். தமிழ், ஆங்கிலாம்,ஹிந்தி பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளில் பேசும் புலமை வாய்ந்தவர்.

ஆளுநருக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது? முதலமைச்சரின் அதிகாரங்கள் என்னென்ன? சட்டம் என்ன சொல்கிறது?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை
எடப்பாடிக்கு வேட்டு வைத்த செங்ஸ்..! விஜய் தான் முதலமைச்சர் என சபதம்