டாஸ்மாக் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு.. அதிகரித்த வருமானம்.. எவ்வளவு கோடி தெரியுமா..? அமைச்சர் அறிவிப்பு..

Published : Apr 26, 2022, 05:40 PM IST
டாஸ்மாக் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு.. அதிகரித்த வருமானம்.. எவ்வளவு கோடி தெரியுமா..? அமைச்சர் அறிவிப்பு..

சுருக்கம்

டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதல் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021- 22 ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் 36 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மது விலக்கு மற்றம் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு:

டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதல் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021- 22 ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் 36 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மது விலக்கு மற்றம் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசு மது விற்பனை செய்து வருகிறது.  தமிழகம் முழுவதும் 5,380 சில்லறை மது விற்பனை கடைகளும், இதனுடன் இணைந்த 3,240 மது கூடங்களும் உள்ளது. மதுப்பான ஆலைகளிலிருந்து தாயாரிக்கப்படும் மதுப்பானங்கள், ஸ்டிக்கர் ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மது கூடங்களில் உள்நாடு தயாரிக்கப்பட்ட மற்றும் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

36 ஆயிரம் கோடி வருவாய்:

இந்நிலையில் 2020 - 2021 ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிபேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை: ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி ஆகியவைகள் மூலம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கிறது. 2003-04 ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் 3639.93 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. இந்நிலையில் 19 ஆண்டுகளில் இந்த வருவாய் ரூ.36 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021-22 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36,013.14 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2200 கோடி கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது. 2020-21ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.33,811.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சம்பள உயர்வு அறிவிப்பு:

தமிழ்நாட்டில் டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதல் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் 24,805 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ரூ.16.67 கோடி கூடுதல் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 6715 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரம் விற்பனையாளர்கள், 3,900 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 24,800 க்கும் அதிகமான பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் மாதம் முதல் ரூ.500 ஊதிய உயர்வு  வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!
"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!