Tamilnadu Rain Update News : அடுத்த 5 நாட்களுக்கு மழை அடிச்சு ஊத்தப்போகுது.. மக்களே உஷார்.! எங்கு தெரியுமா ?

Published : Apr 26, 2022, 01:49 PM IST
Tamilnadu Rain Update News : அடுத்த 5 நாட்களுக்கு மழை அடிச்சு ஊத்தப்போகுது.. மக்களே உஷார்.! எங்கு தெரியுமா ?

சுருக்கம்

Rain in Tamilnadu Today : தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி,  திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, நாமக்கல்,  டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும்  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

நாளை (புதன்கிழமை) கன்னியாகுமரி,  திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள்,  ராமநாதபுரம்  மற்றும்  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுதினம் (வியாழக்கிழமை) கன்னியாகுமரி,  திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 29 மற்றும் 30ம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க : ஏன்டா திமுகவுக்கு ஓட்டு போட்டோம்னு மக்கள் ஃபீல் பன்றாங்க தெரியுமா ? மீண்டும் ஃபார்முக்கு வந்த கே.டி.ஆர் !

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்.! விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன? வழிமுறைகள் இதோ.!
"சினிமா காட்டி ஏமாற்ற முடியாது!" முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி கொடுத்த மரண மாஸ் பதிலடி!