
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொடூர கொலை மற்றும் கொள்ளை விவகாரத்துக்கும் தனக்கும் எள்முனையளவும் தொடர்பில்லை என்று வெளிப்படையாக மறுத்திருக்கிறார்,
ஜெ., பங்களாவுக்கு பர்னிச்சர் சப்ளை செய்தவரும், சசியின் பூரண ஆசி பெற்றவருமான கேரளாவைச் சேர்ந்த சஜீவன்.
போலீஸும் இந்த விவகாரத்தில் அவரை பெரிதாக குடையவில்லை. இது அவருக்கு எதிராக பழைய பகையை இந்த விவகாரம் மூலமாக தீர்த்துக் கொள்ள முயன்ற அதிமுக முக்கிய புள்ளிகள் சிலருக்கு எரிச்சலை ஊட்டியிருக்கிறது.
எனவே நீலகிரி மாவட்டத்தில் அவரால் நகரச்செயலாளர் ஆக்கப்பட்டிருக்கும் ஒரு நபர் மீதிருக்கும் பழைய அரிசிக்கடத்தல் வழக்கை போலீஸ் மூலமாக மீண்டும் தூண்டிவிட ஹை மூவில் இருக்கிறார்களாம்.
இதன் மூலம் சஜீவனுக்கும் மேலும் சிக்கலை கிளப்பலாம் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு.