
மத்திய அரசு வரை நெருக்கம் வளர்த்திருப்பவர் அந்த யோகி. சில மாதங்களுக்கு முன்பு இவரது மையத்தை கண் வைத்து கார்னர் செய்த சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும். இந்த மையத்தை தடை செய், இந்த மையம் செய்திருக்கும் தடைகளை உடை...என்றெல்லாம் கோரிக்கை வைத்து தாறுமாறாக தகராறு செய்தார்கள்.
‘கம்யூனிஸ்ட் கட்சிகளும், தலித் அமைப்புகளும்தான் எங்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் பிரச்னை கிளப்புகிறார்கள்.’ என்று இந்த சிக்கலுக்கு எதிராக பதில் கொடுத்தது மையம்.
இடையில் சில காலமாக இந்த மையத்தின் மீதான சர்ச்சை அடங்கியிருந்த நிலையில் இப்போது மீண்டும் ஒரு பிரச்னை புகைய ஆரம்பித்திருக்கிறதாம். ‘மேன் மிஸ்ஸிங் விவகாரம்’ ஒன்றை அடிப்படையாக வைத்து இந்த புகைச்சல் எழலாம் என்கிறார்கள்.