சிறார் எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது!!

Published : Jun 23, 2023, 03:41 PM ISTUpdated : Jun 23, 2023, 03:46 PM IST
சிறார் எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது!!

சுருக்கம்

சிறார் எழுத்தாளர் உதயசங்கரின் 'ஆதனின் பொம்மை' என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

பால சாகித்திய புரஸ்கார் (Bal Puraskar) என்ற விருது சாகித்திய அகாதமியால் சிறார் இலக்கியத்திற்கு பங்களிப்பவர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும். இந்த விருது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் குழந்தைகளுக்கான இலக்கிய படைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு சிறார் எழுத்தாளர் உதயசங்கரின் 'ஆதனின் பொம்மை' என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறார் இலக்கியத்திற்கு தொடர்ந்து தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருபவர் எழுத்தாளர் உதயசங்கர். குழந்தைகளுக்கான கதை, நாவல், பாடல் என 20 நேரடி நூல்களை அவர் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி சிறாருக்கான சிறந்த மலையாள நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.

இதுவரை 60-க்கும் மேற்பட்ட மலையாள மொழிபெயர்ப்புகளை செய்து சிறார் இலக்கியத்தில் அரும்பங்காற்றியுள்ளார் உதயசங்கர். தற்போது அவருக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் எழுதிய ‘மாயக்கண்ணாடி’ நூலுக்கும் பல விருதுகள் கிடைத்துள்ளன. 

கடந்தாண்டு தமிழில் சிறார் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சியின் 'மல்லிகாவின் வீடு' என்ற சிறுவர் சிறுகதை தொகுப்புக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: கூழாங்கற்களை சமைத்து உண்ணும் சீனர்கள்... அடேய் கல்லையுமா சாப்புடுவீங்க?!

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!