மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சத்குரு ஜக்கி வாசுதேவ் டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு அண்மைக் காலமாக ஒற்றைத் தலைவலி இருந்ததாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரது மூளையில், ரத்தகசிவு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில், சத்குரு ஜக்கி வாசுதேவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு, தாம் நலமுடன் இருப்பதாக ஜக்கி வாசுதேவ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவர் செய்தித்தாள் படிக்கும் வீடியோவும் வெளியாகியிருந்தது. அவர் நன்றாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
undefined
இந்த நிலையில், மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சத்குரு ஜக்கி வாசுதேவ் டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். “மார்ச் 17ஆம் தேதியன்று அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சத்குரு இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.” என ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கடைசி நாளில் வந்த அடுத்த ஓபிஎஸ்: ராமநாதபுரத்தில் மொத்தம் 6 ஓபிஎஸ் வேட்புமனுத் தாக்கல்!
மருத்துவமனையில் சத்குருவைச் சந்தித்த அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் சங்கீதா ரெட்டி கூறுகையில், “சத்குரு குணமடைந்து வருவதில் மருத்துவர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். சத்குரு, குணமடைந்து வரும்போதும் கூட, உறுதிப்பாடான மனப்பான்மையைக் கடைப்பிடித்து வருகிறார். உலகளாவிய நன்மைக்கான அவரது எண்ணம், கூர்மையான அவரது மனம், அவரது நகைச்சுவை உணர்வு அனைத்தும் அப்படியே உள்ளது. அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வரும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது ஒரு நல்ல செய்தி என்று நான் நினைக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் தியாகி, டாக்டர் எஸ் சட்டர்ஜி மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளில் உள்ள முழு குழுவினருக்கும் அவர்களின் ஆதரவு மற்றும் கவனிப்புக்கு ஈஷா அறக்கட்டளை நன்றி தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் சத்குரு அனைவரிடமிருந்தும் பெற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.