அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! வெறிச்சோடிய அலுவலகங்கள்; முடங்கிய தபால் சேவை...

 
Published : May 23, 2018, 08:05 AM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! வெறிச்சோடிய அலுவலகங்கள்; முடங்கிய தபால் சேவை...

சுருக்கம்

Rural postal workers strike postal service impact

கிருஷ்ணகிரி
 
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் தபால் சேவை முற்றிலும் முடங்கியது.

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் தேசிய இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கிருஷ்ணகிரி தலைமை தபால் அலுவலகத்தின் முன்பு நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முனியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் ரங்கநாதன் மற்றும் பொருளாளர் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், "கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உள்ள 263 தபால் நிலையங்களில் பணியாற்றும் 573 தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளதால், தபால் பட்டுவாடா, அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வசூல், ஏ.டி.எம்., பான்கார்டு போய் சேருவது முடங்கி உள்ளது. முக்கிய தபால்கள் சென்று சேருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் பி-3 கோட்டத்தலைவர் ராமமூர்த்தி, கோட்டச் செயலாளர் செந்தில், கோட்டப்பொருளாளர் சத்தியபூங்குன்றன், பி-4 கோட்டத்தலைவர் ராமமூர்த்தி, கோட்டச் செயலாளர் மணி, கோட்டப்பொருளாளர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். 

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!