"மறக்காம குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுங்க" - தொடங்கியது ரூபல்லா தடுப்பூசி முகாம்

 
Published : Feb 06, 2017, 11:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
"மறக்காம குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுங்க" - தொடங்கியது ரூபல்லா தடுப்பூசி முகாம்

சுருக்கம்

தமிழகம் முழுவதும் ரூபல்லா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி வரும் 28 தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தடுப்பூசி முகாமில் 9 மாதம் நிறைவடைந்த குழந்தை முதல் 15 வயது வரை உள்ள சிறியவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதிலும் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இந்த முகாம் நடைபெறுகிறது.

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார செவிலியர் என 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 1.8 கோடி குழந்தைகளுக்கு ரூபல்லா தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை பெருவிரலில் அடையாளத்துக்காக மை வைக்கப்படும் எனவும், சுகாதாரத்ததுறை கூறியுள்ளது.

ரூபல்லா தடுப்பூசி போடப்பட்ட 1 வாரத்திற்குள் குழந்தைகளுக்கு காய்ச்சல், ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!