200 அடி பள்ளத்தாக்கில் உருண்டு கார் விபத்து; ஒருவர் பலி…

 
Published : Feb 06, 2017, 11:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
200 அடி பள்ளத்தாக்கில் உருண்டு கார் விபத்து; ஒருவர் பலி…

சுருக்கம்

கொடைக்கானல்:

கொடைக்கானல் பழனி சாலையில் உள்ள 200அடி பள்ளத்தில் கார் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். நான்கு பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொடைக்கானல் பழனி சாலையில் மாதத்திற்கு இரண்டு முறைக்கு மேல் விபத்து  ஏர்படுவது வழக்கம். இங்குள்ள 200 அடி பள்ளத்தாக்கில் வாகனங்கள் உருண்டு விழுந்து பெரும் விபத்தைச் சந்திக்கின்றன.

இந்த பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைத்தும், வாகன ஓட்டிகள் வேகம் காரணமாகவும், இந்த சாலையில் நிலை தடுமாறியும் விபத்து உள்ளாகின்றனர்.

இந்த முறையும், கொடைக்கானல் பழனி சாலையில் உள்ள 200 அடி பள்ளத்தாக்கில் வந்த ஐந்து பேருடன் கார் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது.

இதில், காரில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், நான்கு பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய விபரங்களை காவலாளர்கள் விசாரித்து வருகின்ன்றனர்.

PREV
click me!

Recommended Stories

கோவையில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மதில் சுவரை இடித்து கையகப்படுத்துங்க.. பொதுமக்கள் கோரிக்கை!
பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி