
Dog bite incidents : செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் பொது இடங்களில் அசால்டாக அதன் உரிமையாளர்கள் கொண்டு செல்வதால் சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை கடித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் பூங்காவில் நடை பயிற்சி வந்தவர் எந்த வித சங்கிலியும் இல்லாமல் நாயை அழைத்து வந்த நிலையில் சிறுமியை கடித்து குதறியது. இதில் சிறுமியின் தலை முழுவதுமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்டது .
ஆட்டு கொட்டகைகளில் புகுந்த மர்ம விலங்கு.! துடி துடித்து பலியான 35 உயிர்கள்- கதறும் விவசாயி
வளர்ப்பு நாய்களால் அச்சம்
குறிப்பாக தமிழகத்தில், 23 இனங்களை சேர்ந்த நாய்களை வளர்க்க அரசு தடை விதித்துள்ளது. உரிமம் பெறாமல் நாய் வளர்த்தால், உரிமையாளருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவானது வெளியானது. மேலும் மிகவும் ஆக்ரோஷமானவை மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் என, அடையாளம் காணப்பட்டுள்ளவற்றை இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்யவும், வளர்ப்பு பிராணியாக விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொடூரமான நாய்களை வைத்திருப்பவர்கள் உடனடியாக அந்த நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் நாய் வளர்ப்பவர்கள் தங்களது நாய்களை சாலையில் அழைத்து செல்லும் போது, நாய்களுக்கு வாய் மூடி கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளரே பொறுப்பு இது போன்ற பல விதிமுறைகளை கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. ஆனால் இந்த உத்தரவுகளை கடைப்பிடிக்காத நிலை நீடித்து வந்தது.
நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு முத்தம் கொடுக்கலாமா?
நாய்களுக்கு வாய் கவசம்- அபராதம்
இந்த சூழ்நிலையில் பொது இடங்களுக்கு நாய்களை அழைத்து செல்லும் போது அதற்கு உரிய வகையில் கட்டாயம் வாய் கவசம் அணிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. இதனை பின்பற்றாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.