
சென்னை ஆர்கே நகரில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ரவுடிகள் 5 பேரை போலீசார்
கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 1/2 அடி நீள கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை நகரில் தலைமறைவாக உள்ள ரவுடிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்.கே. நகர் போலீசார் நேற்று அதிகாலையில் ஆர்கே நகர் மீனாம்மாள் நகர், ரெயில்வே கேட் அருகே உள்ள அடர்ந்த செடிகளுக்கு இடையே ஆள்நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது 5 பேர் போலீசாரை கண்டு ஓடினர். பின்னர் போலீசார் அவர்களை விரட்டிப் பிடித்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து சோதனை செய்த போது அவர்களிடம் இருந்து சுமார் 2 1/2 அடி நீளமுள்ள கத்தி- கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர்கள் கொறுக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜேக்கப் (34), மூலகொத்தளத்தைச் சேர்ந்த சரவணன் (26), அப்பு (24), வியாசர்பாடி சதீஷ்குமார் (22), வண்ணாரப்பேட்டை அண்ணாமலை (22) என தெரியவந்தது. எதிரி ஒருவரை தாக்குவதற்காக கத்தியுடன் காத்திருந்ததாக 5 பேரும் வாக்குமூலம் அளித்தனர். ஜேக்கப் மீது கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. இதனையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.