நடன இயக்குனருக்கு செல்போனில் வலைவிரித்த ரௌடிகள்; கார், பணத்தை பிடுங்கி கொண்டு விரட்டிய சோகம்...

 
Published : May 29, 2018, 06:36 AM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
நடன இயக்குனருக்கு செல்போனில் வலைவிரித்த ரௌடிகள்; கார், பணத்தை பிடுங்கி கொண்டு விரட்டிய சோகம்...

சுருக்கம்

rowdies theft car money from Dance master by cellphone talk

சேலம்

சேலத்தில் கோயில் நிகழ்ச்சிக்கு நடன குழு வேண்டும் என்று கூறி நடன இயக்குனரை வரவழைத்து அவரிடம் இருந்து சொகுசு கார், நகை, பணம் முதலியவற்றை பறித்த இரண்டு ரௌடிகளை காவலாளர்கள் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவர் மதியழகன் (26). நடன இயக்குனரான இவர் குறும்படங்களை எடுத்து வருகிறார். 

சேலம் அருகே திருமலைகிரியைச் சேர்ந்த அமிர்தராஜ் என்பவர், மதியழகனை தொடர்புகொண்டு பல்வேறு கோயில் நிகழ்ச்சிகள் இருப்பதாகவும், அதற்கு நடன குழு வேண்டும் எனவும், இதுகுறித்து நேரில் பேச வருமாறு அழைப்புவிடுத்துள்ளார். 

இதை நம்பி மதியழகனும், கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி சேலம் வந்தார். அதன்பின்னர் அஸ்தம்பட்டி அம்மா உணவகம் அருகே வைத்து அமிர்தராஜ், அவரது நண்பர்கள் திருநாவுக்கரசு (28), அஸ்தம்பட்டி ராஜாராம் நகரைச் சேர்ந்த அசாருதீன் (30) ஆகியோர் நடன இயக்குனர் மதியழகனை மடக்கினர். 

அவருடைய ரூ.12 இலட்சம் மதிப்புள்ள சொகுசு கார், ஒன்றரை சவரன் மோதிரம், ரூ.4000 ரொக்கம், செல்போன் மற்றும் கிரெடிட் கார்டுகளை மிரட்டி பறித்துக்கொண்டு அங்கிருந்து மதியழகனை விரட்டினர். 

இது தொடர்பாக மதியழகன் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அஸ்தம்பட்டி காவலாளர்கள் வழக்குப்பதிந்து மூவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இதில், அமிர்தராஜ், திருநாவுக்கரசு ஆகியோரை நேற்று முன்தினம் காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர். இவர்கள் இருவரும் ரௌடிகள். கர்நாடக மாநிலத்தில் நடந்த வெள்ளி நகை கொள்ளையில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறை சென்று, ஜாமீனில் வெளியே வந்தவர்கள். 

அசாருதீன் கடந்த வாரம் பள்ளப்பட்டியில் உள்ள மசாஜ் சென்டரில் புகுந்து பெண் ஊழியரை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்த வழக்கில் காவலாளர்கள் மீண்டும் கைது செய்தனர். 

இவர் மீது பள்ளப்பட்டி, அழகாபுரம், அஸ்தம்பட்டி காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் பறித்து சென்ற  காரை காவலாளர்கள் மீட்டனர்.  

இதுகுறித்து காவலாளர்கள் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!