
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு லீலா என்கிற மனைவியும், ராஜேஷ் என்கிற மகனும் உள்ளனர்.
ராஜேஷ் இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு, தற்போது ஐ.ஏ.எஸ் போட்டி தேர்வுக்காக சென்னையில் தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் வெங்கடேசன் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். மேலும் கடன் சுமையும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்தனர். இதனால் தன்னுடைய மகன் ராஜேஷ்க்கு போன் செய்து பழனி கோவிலுக்கு போக வேண்டும் என கூறி வரவழைத்துள்ளனர்.
இதனால் உடனடியாக ராஜேஷ் வீட்டிற்கு வந்தார். கதவு உள்பக்கம் பூட்டி இருந்ததால், ஜென்னல் வழியாக பெற்றோரை அழைக்க ஜென்னல்களை திறந்துள்ளார். அப்போது தந்தை வெங்கடேசன் மற்றும் தாய் லீலா ஆகிய இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளனர்.
இதனை உடனடியாக அக்கம், பக்கத்தினரிடம் கூறி கதவை உடைத்து உள்ளே சென்று, இவருடைய உடல்களையும் மீட்டு, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின், இவர்களுடைய மரணம் குறித்து விசாரணை செய்ததில் கடன் பிரச்சை காரணமாக இவர்கள் தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்தது. மேலும் இவர்கள் எழுதிய கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் "தங்கள் உடல்களை மீண்டும் இந்த வீட்டிற்கு கொண்டு வர வேண்டாம் என்றும் நாங்கள் இறந்ததை உறவினர்கள் யாருக்கும் சொல்ல வேண்டாம் என மிகுந்த மன வேதனையுடன் எழுதி இருந்தனர்".