வாகன ஓட்டிகள் கவனத்திற்கு !! சென்னையில் இந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்.. இன்று முதல் நடைமுறை..

By Thanalakshmi VFirst Published Jun 4, 2022, 9:50 AM IST
Highlights

சென்னை அண்ணா சாலை, ஸ்பென்சர் சந்திப்பு, அடையாறு, மத்திய கைலாஷ் ஆகிய பகுதிகளில் இன்று முதல் 10 நாட்களுக்கு சோதனை அடிப்படிப்படையில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 

இதுக்குறித்து போக்குவரத்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” வாகன நெரிசல் அதிகமான நேரங்களில் காலை மற்றும் மாலை ஸ்பென்சா் சந்திப்பு மற்றும் ஸ்மித் சாலை சந்திப்பில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலையை அடையலாம். டவர் கிளாக் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம். பட்டு லாஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்களும் ரேமண்ட்ஸ் துணிக்கடை எதிரில் U திருப்பம் செய்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: 50 நாட்களில் இத்தனை கோடி அபராதம் வசூலா? காவல்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்தினால் ஸ்மித் சாலை சிக்னல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இதனால் அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்லலாம். இதே போ பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் பொருட்டு , அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் இன்று அமல்படுத்தப்படுகிறது. 

பழைய மாமல்லபுரம் சாலை இந்திரா நகா் சந்திப்பு வழியாக அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள், ராஜீவ்காந்தி சாலை வழியாக (மத்திய கைலாஷ் பின்புறம்) இடதுபுறம் திரும்பி, சா்தாா் பட்டேல் சாலையை சென்று காந்தி மண்டபம் மேம்பாலத்தின் கீழ் ‘யு‘ திருப்பத்தில் திரும்பி மீண்டும் சா்தாா் பட்டேல் சாலை வழியாக சி.பி.டி சந்திப்பை அடையலாம். அங்கிருந்து அவரவா் இலக்கை அடையலாம் அல்லது பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் இந்திரா நகா் சிக்னலில் வலது புறம் திரும்பி இந்திரா நகா் 2-ஆவது அவென்யூ (வாட்டா் டேங்க் சாலை) இந்திரா நகா் 1-ஆவது அவென்யூ சந்திப்பு வழியாக எல்.பி.சாலையை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் ஒரே நாளில் அதிரடி.. 33 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.. காவல் ஆணையர் சங்கர் ஜிவால்..!

click me!