பேருந்து மீது விழுந்த வழிகாட்டி பலகை - 8 பேர் படுகாயம்... அண்ணா சாலையில் பரபரப்பு!!

 
Published : Aug 03, 2017, 11:54 AM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
பேருந்து மீது விழுந்த வழிகாட்டி பலகை - 8 பேர் படுகாயம்... அண்ணா சாலையில் பரபரப்பு!!

சுருக்கம்

route board fell down on bus in anna salai

சென்னை, அண்ணாசாலை, ஸ்பென்சர் பிளாசா அருகே இருந்த வழிகாட்டி பலகை மீது மாநகர பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 6 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர். பேருந்து ஓட்டுநரும் பலத்த காயமடைந்தார். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து 18K மாநகரப் பேருந்து பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது. ஸ்பென்சர் பிளாசா அருகே கொண்டிருந்த இந்த பேருந்தை, பைக் ஒன்று முந்திச்செல்ல முயன்றுள்ளது.

பைக் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்து ஓட்டுநர், பேருந்தை இடதுபக்கமாக திருப்பியுள்ளார். சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகை மீது பேருந்து பலமாக மோதியுள்ளது. இதில், பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் உட்பட 8 பேருக்கு காயமேற்பட்டுள்ளது. மேலும், பேருந்து ஓட்டுநரும் பலத்த காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் காயமடைந்தவர்கள் மீட்டனர். அவர்களை, ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வழிகாட்டு பலகை விழுந்ததில், லோடு ஆட்டோ ஒன்று சேதமடைந்ததாக தெரிகிறது. 

விபத்துக்குள்ளான பேருந்தை அகற்றும் பணியில், போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரமாக அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!