"கட்சராயன் ஏரியை பார்வையிட மீண்டும் செல்வேன்" - ஸ்டாலின் ஆவேசம்!!

First Published Aug 3, 2017, 11:46 AM IST
Highlights
stalin pressmeet in kolathur


சென்னை, கொளத்தூர் தொகுதியில் 80 கிலோ மீட்டர் உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகள், தற்போது புதைவட மின் கம்பிகளாக மாற்றப்பட உள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதிகயில் திட்டப்பணிகளை இன்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்குப் பிறகு மு.கஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொளத்தூர் தொகுயில் உயரழுத்த மற்றும் குறைவழுத்த மின் கம்பிகள் மேலே செல்கின்றன. 

அவ்வாறு செல்லும் மின் கம்பிகளை குறைவழுத்த கம்பிகளாக மாற்ற வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். உயர் அழுத்த மின் கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றவும் சட்டமன்றத்தில் வலியுறுத்தியிருந்தேன்

ரூ.355 கோடி செலவில் அவைகள் புதைவட மின் கம்பிகளாக மாற்றும் திட்டம் தொடங்கியுள்ளது. அதேபோல் துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

கொளத்தூர் தொகுதியில் 80 கிலோ மீட்டர் உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகள், தற்போது புதைவட மின் கம்பிகளாக மாற்றப்பட உள்ளன. 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணம் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் அமைச்ச்ர விஜயபாஸ்கர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அதேபோல் பான் குட்கா விவகாரத்தின்போதும் அவர் ராஜினாமா செய்யவில்லை. இனியாவது அவர் ராஜினாமா
செய்ய வேண்டும்.

ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலேயே கவனம் உள்ளது. எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுப்பது பற்றியே சிந்திக்கின்றனர். 

தமிழகத்தில் எந்த பணியும் நடக்கவில்லை. இதனால் பல துன்பங்கள் மற்றும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். சேலம் கட்சராயன் ஏரியை பார்வையிட மீண்டும் செல்வேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

click me!