
கடந்த வாரம் மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியில் இருந்த பழைய இரும்புக்கடையில், எடைக்குப் போடப்பட்ட ராக்கெட் லாஞ்சரின் அடிப்பாகம் வெடித்தது. இதுகுறித்து போலீஸ் விசாரித்ததில் பணியில் இருந்த ஒருசில வீர்ர்கள் தான் ராக்கெட் லாஞ்சரகளை இரும்பு கடையில் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது
மணப்பாறை பொத்தமேட்டுபட்டியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வரும் அருளானந்தத்தின் கடையில் பழைய இரும்பு பொருட்களை உடைப்பதற்கு துணையாக இருக்க மாரிமுத்துவை அழைத்து வந்துள்ளார்.
இருவரும் பொருட்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு அலுமினிய உருளையை அருளானந்தம் காலில் பிடித்துகொள்ள, வெட்டு இரும்பு வைத்து சுத்தியலால் மாரிமுத்து அடித்துள்ளார். அப்போது அந்த உருளை திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது
இதிலிருந்து சிதறிய துகள்கள் இரும்பு தகரங்களை துளைத்துக்கொண்டு அருகில் உள்ள பஞ்சர் கடையில் வேலை பார்த்துகொண்டிருந்த பாலசுப்பிரமணியன் மீது உடல் முழுவதும் தெரித்து பலத்தகாயத்தை ஏற்படுத்தியது. மேலும் எதிரே மூங்கில் கடை வைத்திருக்கும் கனகராஜின் உடலில் துகள்கள் சிதறி காயத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீரமலை பகுதியில் நடந்துமுடிந்த ராணுவ துப்பாக்கி சுடும் பயிற்சியில் வெடிக்காத குண்டுகளை பணியில் இருந்த வீர்ர்கள் எடுத்து வந்து பழைய இரும்பு கடையில் விற்பணை செய்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் உடனே ராணுவ துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
ராணுவ அதிகாரிகள் நேற்று வீரமலை மற்றும் மணப்பாறை பகுதிகளில் விசாரணை நடத்தினர். அப்போது பணியில் இருந்த ஒருசில வீர்ர்கள் தான் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் யார் என்று ராணுவ அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வீரமலை பகுதியில் இருந்து வெடிக்காத 10க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளையும் அவர்கள் கைப்பற்றி ஆயுத கிடங்கில் வைத்துள்ளனர். இருப்பு கடையில் இருந்தும் 5 குண்டுகள் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரும்பு கடையில் விற்பணை செய்த வீர்ர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.