தலையில் ஏறிய டிராக்டர்... சம்பவ இடத்திலேயே பலியான கல்லூரி மாணவர்கள்!!

Asianet News Tamil  
Published : Jul 08, 2017, 02:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
தலையில் ஏறிய டிராக்டர்... சம்பவ இடத்திலேயே பலியான கல்லூரி மாணவர்கள்!!

சுருக்கம்

students died in tractor accident

இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நேருக்கு நேர் மோதி கீழே விழுந்த போது பின்னால் வந்த மணல் டிராக்டர் ஏறியதில் இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியை சேர்ந்தவர்கள் அருண் பரதன். மாணவர்களான இவர்கள் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த மணல் டிராக்டர் அவர்கள் மீது ஏறியது.

இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள்? ரொக்கப்பணம் உண்டா? அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!