சென்னையில் மேலும் ஒரு கொள்ளை.. கத்தி முனையில் மிரட்டி முகமூடி கும்பல் துணிகரம்.. அச்சத்தில் மக்கள்

By Thanalakshmi VFirst Published Aug 17, 2022, 8:47 AM IST
Highlights

சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் பேங்கில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் சென்னை மேலும் ஒரு நிதி நிறுவனத்தில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னையில் ஓசோன் கேபிடல் நிறுவனத்தில் ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி, கை கால்களை கட்டிப்போட்டு ரூபாய் 30 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வடபழனி மன்னார் முதலிதெருவில் உள்ள இந்த நிதி நிறுவனத்தில் 7 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் பணத்தை கொள்ளை அடித்து தப்பி சென்றுள்ளனர்.  ஊழியர்கள் தீபக், சஞ்சீவ் குமார் ஆகியோரை கத்தி முனையில் கட்டி போட்டு கொள்ளை கும்பல் நிதி நிறுவனத்தில் கைவரிசை காட்டியுள்ளது.

மேலும் படிக்க:சென்னையில் வங்கி கொள்ளை.. 72 மணி நேரத்தில் முக்கிய குற்றவாளி கைது.. 18 கிலோ தங்கம் மீட்பு.. நடந்தது என்ன..?

ஏற்கனவே கடந்த 13 ஆம் தேதி சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. வாடிக்கையாளர் சேவை மையத்தில் மேலாளராக பணியாற்றிய முருகன், தனது கூட்டாளிகளுடன் சேர்த்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார். வங்கி ஊழியர்களை கத்தி காட்டி மிரட்டி,பாதுகாப்பு பெட்டக அறையின் சாவி வாங்கி 11 கோடி மதிப்பிலான 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றது அந்த கும்பல். 

வங்கியில் பட்டப்பகலில் நடந்தேறிய இந்த கொள்ளை சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுவரை முக்கிய குற்றவாளி முருகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகைகளை மூன்றே நாட்களில் போலீஸார் மீட்ட நிலையில், மேலும் ஒருவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். நகைகளை உருக்கித் தருவது தொடர்பாக பேரம் பேசிய கோவை நகை வியாபாரியின் உறவினரிடமும் விசாரணை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க:பட்ட பகலில் வங்கியில் நகை கொள்ளை.. திட்டம் போட்டு காய் நகர்த்திய கும்பல்..? காவல்துறை சொன்ன முக்கிய தகவல்

மேலும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, நண்பர்களுடன் சேர்த்து money heist  உள்ளிட்ட திரைபடங்களை பார்த்து கொள்ளை அடிப்பது குறித்து திட்டம் போட்டுள்ளனர். மேலும் போலீசாரை திசை மாற்றுவதற்கு செல்போனை அடிக்கடி ஆப் , ஆன் செய்ததாகவும் திருடிய நகைகளை மொத்தமாக எடுத்துச் செல்லாமல் ஒவ்வொருவரும் பிரித்து எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடிவு செய்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் ஓசோன் கேபிடல் நிறுவனத்தில் ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி, கை கால்களை கட்டிப்போட்டு ரூபாய் 30 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களின் விருகம்பாக்கத்தை சேர்ந்த இக்பால் கைதான நிலையில் தப்பிய கொள்ளையர்களுக்கு போலீசார் வலை வீச்சு தேடி கொண்டு வருகின்றனர்
 

click me!