
கரூர்
கரூரில், அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சி, ஊரகப் பகுதிகளின் பத்து இடங்களில் ரூ. 6.96 கோடியில் சாலை பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
கரூர் மாவட்டம், புஞ்சைப்புகழூர், பள்ளபட்டி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பத்து இடங்களில் ரூ. 6.96 கோடியில் சாலைப் பணிக்கான பூமி பூஜை, மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடக்கி வைத்தனர். பின்னர், மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ். கவிதா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சடையப்பன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜேந்திரன்,
முன்னாள் எம்எல்ஏ காமராஜ், கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் காளியப்பன், எஸ். திருவிகா, கமலக்கண்ணன், மார்கண்டேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.