கட்டண உயர்வால் பேருந்துகளை கைவிட்ட மக்கள்; இரயிலுக்கு மாறி அரசின் திட்டத்தை தவிடு பொடியாக்கினர்...

 
Published : Jan 22, 2018, 08:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
கட்டண உயர்வால் பேருந்துகளை கைவிட்ட மக்கள்; இரயிலுக்கு மாறி அரசின் திட்டத்தை தவிடு பொடியாக்கினர்...

சுருக்கம்

People who have dropped buses and changed to train cause of bus tariff hike

கன்னியாகுமரி

பேருந்து கட்டண உயர்வை சமாளிக்க முடியாத மக்கள், இரயில் பயணத்திற்கு மாறி அரசின் திட்டத்தை தவிடுபொடி ஆக்கினர்.

கட்டண உயர்வு

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. கட்டண உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டணத்தை திரும்ப பெற முடியாது என்று அரசு தரப்பில் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் வேலையின் காரணமாக நாள்தோரும் திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரத்திற்குச் சென்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் பேருந்துகளில் செல்வதையே இதுநாள்வரை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

இரயில் பயணம்

இந்த நிலையில், பேருந்து கட்டணம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத அளவுக்கு உயர்த்தப்பட்டு மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதனால் திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரம் செல்பவர்கள் கடந்த இரண்டு நாள்களாக பேருந்துகளில் செல்வதை தவிர்த்து இரயில்களை நாடியுள்ளனர்.

திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பேருந்தில் செல்வதை காட்டிலும் இரயிலில் குறைவான கட்டணம் செலுத்தினாலே போதும் என்பதே இதற்கு காராணம்.

கட்டணம் வசூல்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்ல பாய்ன்ட் டூ பாய்ன்ட் பேருந்தின் 71 ரூபாயும், சாதாரண பேருந்தில் 63 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இரயிலில் செல்ல ரூ.20 மட்டுமே. மேலும், விரைவு இரயிலில் ரூ.45-ம், சூப்பர் பாஸ்ட் விரைவு இரயிலில் ரூ.60-ம் வசூல் செய்யப்படுகிறது.

இதேபோல திருவனந்தபுரத்திற்கு தமிழக அரசு பேருந்தில் ரூ.73-ம், கேரள அரசு பேருந்தில் ரூ.71-ம் கட்டணம். ஆனால், இரயிலில்களில் திருநெல்வேலி செல்லவதற்காக வசூல் செய்யப்படும் கட்டணம் தான் திருவனந்தபுரம் செல்லவும் பெறப்படுகிறது. மேலும் நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு பயணிகள் இரயிலில் ரூ.95-ம், மதுரைக்கு ரூ.46-ம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

அலைமோதும் கூட்டம்

பேருந்து கட்டணத்தைவிட இரயில் கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள் இரயில்களில் செல்லவே விரும்புகின்றனர். இதனால் நாகர்கோவிலில் இருந்து வெளியூர் செல்லும் இரயிலில்களில் பயணிகள் கூட்டம் அள்ளுகிறது. 

PREV
click me!

Recommended Stories

நெஞ்சை உருக்கும் சோகம்..! அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7ம் வகுப்பு மாணவன் பலி..!
செங்கோட்டையனுக்கு சின்ன சங்கடமோ, மரியாதை குறைவோ வந்துடக்கூடாது..! புஸ்சியிடம் விஜய் போட்ட உத்தரவு