தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்து ரிவீயூ சொன்ன ஆளுநர் ஆர்.என்.ரவி.! என்ன சொன்னார் தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published May 22, 2023, 9:04 AM IST

சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்த தமிழக ஆளுநர் ரவி, இந்த திரைப்படம்  ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். 


தி கேரளா ஸ்டோரி-சர்ச்சை

தி கேரளா ஸ்டோரி என்கிற திரைப்படத்தை இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கியுள்ளார். இந்த படத்தில்  அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த  படம்,  கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் முக்கிய கருவாக  கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக படமானது எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழகத்தில் இந்த திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இதனையடுத்து  மேற்குவங்காளத்தில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் திரையரங்கத்தில் போதிய வரவேற்பு இல்லாத காணத்தால் திரையிடவில்லையென திரையரங்கத்தினர் தெரிவித்தனர். 

Latest Videos

undefined

படத்திற்கு தடை விதித்த மாநிலங்கள்

இந்தநிலையில்  இந்த படம் தமிழ், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியான நிலையில் தற்போது வரை இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கும் அளிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் மேற்குவங்கத்தில் இந்த திரைப்படம் வெளியிடாததற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த திரைப்படத்தை வெளியிட  மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

“தி கேரளா ஸ்டோரி” படத்தை பார்த்தேன்.
ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி.: ஆளுநர் ரவி

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn)

 

கொடூரமான யதார்த்தம்

இந்தநிலையில் இந்த தி கேரளா ஸ்டோரி என்கிற படத்தை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சென்று  திரைப்படத்தை பார்த்தார். நுங்கப்பாக்கத்தில் உள்ள பிரிவியூ திரையரங்கில் படத்தை பார்த்தார். இதனையடுத்து தமிழ்நாடு ராஜ்பவன் சார்பாக வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அப்போ அம்மா குடீநீர் விற்பனை செய்யப்பட்டதற்கு போராடினீங்க.! இப்போ ஆவினில் நீங்களே விற்குறீங்க- சீறும் அண்ணாமலை

click me!