நீட் தேர்வுக்கு மட்டும் எதிர்ப்பு.. உதய் மின் திட்டத்தை கைவிடுங்க - தலையில் அடித்து கதறும் வணிகர் சங்கங்கள்

Published : Jun 16, 2023, 07:44 AM IST
நீட் தேர்வுக்கு மட்டும் எதிர்ப்பு.. உதய் மின் திட்டத்தை கைவிடுங்க - தலையில் அடித்து கதறும் வணிகர் சங்கங்கள்

சுருக்கம்

மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஜூலை 1 முதல் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்திருப்பது, அப்பிரிவினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே 2022 செப்டம்பரில் அனைத்துப் பிரிவு மின் நுகர்வோருக்கும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், ஓராண்டுக்குள் மீண்டும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தக் கட்டண உயர்வு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மின் எரிபொருள் மற்றும் மின்சாரக் கொள்முதல் விலை உயர்வால் மின் வாரியத்துக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க, 2022-23 தொடங்கி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வைத் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை வாரியம் அறிவித்திருந்தது.

சிபிஐயின் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின்.. 200 கோடி விவகாரத்தை கிளப்பும் அண்ணாமலை - மீண்டும் பரபரப்பு

கடந்த ஆண்டு மின் கட்டணம் அனைத்து நுகர்வோருக்கும் அதிகரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஜூலை 1 முதல்என அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவது என்னும் நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது 2.18% மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசினுடைய உதய் மின் திட்டத்தை காரணம் காட்டி மின் கட்டண உயர்வு என்பது ஏற்புடையது அல்ல என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது .தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொது செயலாளர் எஸ். சௌந்தர்ராஜன் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வணிகர் மற்றும் தொழில் துறையினர் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு தற்போது ஏழு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் உயர்வு, அதுவும் குறிப்பாக வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினருக்கு உயர்வு என்பது துரதிஷ்டவசமானது.

இது வணிகத்தையும், உற்பத்தி தொழிலையும் கடுமையான பாதிப்போடு வணிகம் மற்றும் தொழில் வளர்ச்சியை பாதிக்கிறது அரசுக்கு வரும் வரி வருவாய் குறைவதற்கான வழிவகையை ஏற்படுத்தும். மத்திய அரசினுடைய உதய் மின் திட்டத்தை காரணம் காட்டி மின் கட்டண உயர்வு என்பது ஏற்புடையது அல்ல.

மத்திய அரசினுடைய நீட் தேர்வு, மத்திய அரசினுடைய புதிய கல்விக் கொள்கை, இவ்வாறு மத்திய அரசினுடைய பல திட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வரும் தமிழக அரசு, இந்த உதய் மின் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். தவிர்த்திட வேண்டும். தமிழக அரசு தனது தேர்தல் அறிவிப்பின்படி மின் கட்டண கணக்கீட்டை 2 மாதத்திற்கு ஒரு முறை என உள்ளதை மாற்றி, பிரதி மாதம் கணக்கிடும் முறையினை கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த டார்கெட் அமைச்சர் சிவசங்கர்.. ஜூனியர் செந்தில் பாலாஜி - திமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் அண்ணாமலை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chitra Pournami: சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல்.! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. பெங்களூர் ஏர்ப்போட்டில் சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?