
திருவள்ளூரில் பழைய 500 ரூபாய் நோட்டுக்கு கூட சில்லறை கிடைக்குது ஆனால் புதிய ரூ.2000-க்கு சில்லறை கிடைக்காததால் மக்கள் மீண்டும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
திருவள்ளூரில் இருக்கும் வங்கிகளில் ரூ. 500, 1000 நோட்டுகளை மாற்றச் சென்ற பெரும்பாலான பொதுமக்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டது.
இதனால், அந்த நோட்டுகளைப் பெற்று வந்து வெளியில் மாற்ற முயன்றால் அனைத்து கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் பழைய 500, 1,000 நோட்டுகளை சில்லறையாக தருகின்றனர்.
இல்லையென்றால் சில்லறை கொண்டு வரக் கூறி திருப்பி அனுப்பு அலைக்களிக்கின்றனர்.
பழைய 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் சில்லறை கிடைக்காமல் உணவகங்களில் சாப்பிட முடியாமலும், பயணத்தின்போது தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமலும் கடுமையாக அவதிப்பட்டனர்.
ஆனால், புதிதாக வந்த இந்த 2000 ரூபாய் நோட்டால் இந்த நிலை நான்கு மடங்காக அதிகரித்ஹ்துள்ளது. இந்த நிலை மேலும் சில நாள்கள் நீடிக்கலாம். தமிழகம் இதிலிருந்து இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இந்நிலையில், பழைய 500 ரூபாய்க்கு கூட 50 ரூபாய் பிடித்துக் கொண்டு சில்லறை கொடுக்குறாங்க. ஆனால், இந்த புதிய 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை கிடைக்க மாட்டேங்குது.
இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தும் முன், அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை ஆராயாமல் மத்திய அரசு செயல்பட்டது என்று பெருவாரியான மக்கள் பிரதமர் மோடியின் மீது காட்டத்தில் இருக்கின்றனர்.
இதுகுறித்து மத்திய அரசு முறையான மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.